தமிழக-கேரள எல்லையில் 8 மணி நேரம் போக்குவரத்து பாதி்ப்பு : பயணிகள் அவதி
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செங்கோட்டை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. நேற்று இரவு மதுரையில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரளாவை நோக்கி சென்றது.
ஆரியங்காவு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென லாரி பழுதானது. டிரைவர் முயற்சி செய்தபோதும் லாரியை பாலத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. லாரி அங்கேயே நின்று விட்டது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்களும் பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டன. நீ்ண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நள்ளிரவு 1 மணியில் இருந்து இன்று காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலை 8 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் சென்றன. கேரளாவிற்கு செல்லும் மலை பாதையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. இவற்றில் 5 பாலங்கள் குறுகிய பாலங்கள் ஆகும். நேற்று நள்ளிரவு லாரி சிக்கியது குறுகிய பாலம் என்பதால் லாரியை அகற்ற முடியாமல் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications