தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டாக உடைந்தது: வெள்ளையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டு பிரிவாக உடைந்துவிட்டது. இந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன் நீக்கப்பட்டுவிட்டதாக போட்டி பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெள்ளையன் தலைமையில் செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக அரசுக்கு எதிராக போராட்டம், தேர்தலில் வணிகர் பேரவை நேரடியாக ஈடுபட்டது போன்ற சம்பவங்களால் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு உருவானது.
இந் நிலையில் தென் சென்னை மாவட்டத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஒரு அணியினர் வெள்ளையனுக்கு எதிரானவர்களைத் திரட்டி, மதுரையில் போட்டி கூட்டம் நடத்தி, வெள்ளையனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து விக்கிரமராஜாவை பதவியில் இருந்து நீக்கினார் வெள்ளையன்.
இதையடுத்து விக்கிரமராஜா அணியினர் திருச்சியில் நேற்று போட்டிக் கூட்டம் நடத்தினர். அதில், பேரவைத் தலைவர் பதவியில் இருந்து வெள்ளையனை தற்காலிகமாக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு்ள்ளது.
பேரவைக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அனைத்து மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கும் என்று இந்த கோஷ்டி அறிவித்துள்ளது.
இதன்மூலம் வணிகர் பேரவை இரண்டாகி வெள்ளையன் தலைமையில் ஒரு அணியும், விக்கிரமராஜா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications