போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் 8 இடங்களில் சுரங்கப் பாதை
சென்னை: சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லக் கூட அதிக நேரம் ஆகிறது. வாகனங்களில் செல்பவர்கள் பாடு இப்படி என்றால், கால் நடையாக செல்லும் மக்களின் பாடை சொல்லவே வேண்டியது இல்லை.
போக்குவரத்து மிகுந்த காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.
சென்னை நகரில் அண்ணாசாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சுரங்கப்பாதை உள்ளது. தற்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மேலும் 8 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி நூறு அடி ரோடு அண்ணா நகர் மேற்கு எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலயம் எதிரே உள்ள ரோடு, எம்.எம்.டி.ஏ. சந்திப்பு, அசோக் பில்லர் போலீஸ் பயிற்சி கல்லூரி, உதயம் தியேட்டர், காசி தியேட்டர், ஈகாட்டு தாங்கல், கிண்டி தொழில் பேட்டை ஆகிய 8 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் இருந்து அசோக்பில்லர் வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது முடிவடைந்த பிறகு சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications