பதவி விலகிய பயிற்சியாளர் கெளசிக்குடன் கள்ளக்காதலா-முன்னாள் மேனேஜர் மறுப்பு

பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து உடனடியாக பசவராஜ் நீக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு இருப்பதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சர்ச்சை முடியும் வரை பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று கூறி விலகி விட்டார் கெளசிக். இந்த நிலையில் கெளசிக்கிடம் உதவிப் பயிற்சியாளராக இருந்தவரும், இந்திய ஹாக்கி அணியின் மேனேஜருமான அனுரீட்டா சைனிக்கும், கெளசிக்குக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. ஆனால் சைனி அதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் அபாண்டமான புகார். இந்தப் புகாரைக் கூறிய வீராங்கனைகள் மீது நான் வழக்கு தொடரப் போகிறேன்.
நானும், கெளசிக்கும் தொழில் ரீதியிலான உறவையே கொண்டிருந்தோம். பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர் என்ற அளவைத் தாண்டி நாங்கள் போனதில்லை. இந்திய மகளிர் ஹாக்கியின் உயர்வுக்காக பாடுபட்டோம்.
அப்படிப்பட்ட எங்களை அவமானப்படுத்தியுள்ளனர். இது மிகப் பெரிய அவதூறு, கெளசிக் விலக்கப்பட்ட விதம் மிகவும் மோசமானது என்று கூறியுள்ளார் அனுரீட்டா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications