தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
சென்னை: டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
விஷமாய் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த முதல்வர்கள் மாநாடு டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டு வசதி திட்டம், பொது விநியோக திட்டம் ஆகிய திட்டங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதை எடுத்துரைத்தேன். இந்த திட்டங்களை பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தலாம் என்று ஆலோசனை அளித்தேன். வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்கும்படி வலியுறுத்தினேன்.
கல்வி மற்றூம் சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதை கூறியபோது பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என மாநாட்டில் கூறினேன். இதில் முதல் கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், தமிழக நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
கடலோர பாதுகாப்பு பணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதற்கான் முழுப்பொறுப்பையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பாரதப் பிரதமர் கிராமச் சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், புதிய மின் நிலையங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும் என்றும், கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற திட்டங்களுக்கும், தமிழகத்தின் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications