வாக்காளர் பட்டியல் பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கன்னியாகுமரி: வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறைகளில் இருந்து ஊழியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே வாக்கு சாவடி வாரியாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பெயர் சேர்க்கை, நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் பாகம் வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும். வாக்காளர் எண்ணிக்கையை பொறுத்து ஒரே வாக்கு சாவடிக்கு 2 பாகங்களும், 1 பாகத்திற்கு 2 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது ஒரு வாக்கு சாவடிக்கு ஒரு அதிகாரி இருந்தாலும், காலியிடங்களை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. ஒரு பாகத்திற்கு ஒரு அதிகாரி கண்டிப்பாக நியமிக்க வேண்டும். கூடுதல் பொறுப்பில் யாரும் இருக்க கூடாது என சமீபத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் பணியில் காலியிடங்களை நிரப்பும் பணி தற்போது மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.
சத்துணவு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து ஊழியர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்பணி முடிந்ததும் தொகுதி வாரியாக அலுவலர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையி்ல் நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications