பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க திமுக அரசு மறுப்பதேன்? விஜயகாந்த் கேள்வி
சென்னை: டெல்லி, ஆந்திராவில் எல்லாம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்கும்போது திமுக அரசு மட்டும் இதைச் செய்ய தொடர்ந்து மறுத்து வருவது ஏன் என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்கனவே பல மடங்கு விலைவாசி அதிகரித்துள்ளது போதாது என்று, இந்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55.50 என்றால், அதன் அடக்க விலை ரூ.20 தான். அரசுகள் விதிக்கும் வரிகள் ரூ.36 ஆகும். கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,80,000 கோடி இத்தகைய வரி விதிப்பின் மூலம் அரசுகளுக்கு லாபம் கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 சதவிகிதமும், டீசலுக்கு லிட்டருக்கு 21.43 சதவிகிதமும் என்று முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இதர மாநிலங்களில் நுழைவு வரி, கூடுதல் வரி, செஸ் வரி என்பனவற்றை எல்லாம் கூட்டியும் கூட 30 சதவிகிதத்திற்கு மேல் வரவில்லை.
டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர். இதனால் டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் விலை கூடாமல் பார்த்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, அதிகபட்சம் வரி விதிக்கும் தி.மு.க அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்?
தமிழ்நாடு அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதின் மூலம் ரூ.6320 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் கூடுதலாக ரூ.500 கோடி அளவிற்கு இந்த லாபம் உயரும். இந்த எதிர்பாராத லாபத்தையாவது தி.மு.க அரசு குறைக்க முன் வந்திருக்கலாம் அல்லவா?
விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிகபட்ச வரி விதித்தும், அவற்றை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து தே.மு.தி.க நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்தகட்டமாக கோவையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பு, தே.மு.தி.க. துணைச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications