போலி மதிப்பெண் சான்றிதழ்-ஏகாம்பரம் சஸ்பெண்ட்
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் சிக்கிய கல்லூரிக் கல்வித்துறை ரெக்கார்ட் கிளார்க் அப்பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலி பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழை விற்பனை செய்து ஏகாம்பரமும், ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடமும் கைதானார்கள். இவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில் ஏகாம்பரத்தை தற்போது 3 நாள் காவலில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வரதப்பன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் ஏகாம்பரம் வசித்து வருகிறார்.அவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் கல்லூரியில் படிக்கிறார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
ஏகாம்பரத்தின் வீட்டில் நேற்று மாலை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தற்போது ஏகாம்பரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ள்ளார்.
ஏகாம்பரத்திடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கிளண்டன், வேலூரைச் சேர்ந்த வேலு ஆகிய கூட்டாளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர்களைக் கைது செய்ய போலீஸார் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
ஆனால் வேலு சிக்கவில்லை. அவரது முகவரியும் போலி எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விரைவில் கிளண்டன் கைது செய்யப்படவுள்ளார்.
ஏகாம்பரத்திற்கு பக்கவாதமும், இருதய நோயும் உள்ளதாம். இதற்கான சிகிச்சைக்குப் பணம் போதவில்லை என்பதால்தான் போலி சான்றிதழ் மோசடியில் இறங்கியுள்ளார்.
ஒரு சான்றிதழுக்கு ரூ.5 ஆயிரம் வரை அவருக்கு பணம் கிடைத்துள்ளது. 4 வருடமாக இந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications