பெண் தாசில்தாரை ஆபாசமாக திட்டியதாக புகார்-கிருஷ்ண பறையனார் கைது
சென்னை: பெண் தாசில்தாரை ஆபாசமாக பேசி திட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து சமூக சமத்துவப் படை அமைப்பின் பொதுச் செயலாளரான கிருஷ்ண பறையானார் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தலைவராக கொண்ட தலித் அமைப்புதான் சமூக சமத்துவப் படை. இதன் பொதுச் செயலாளராக இருப்பவர் கிருஷ்ண பறையனார். சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல் தலைமையில் போலீஸ் படையினர் கிருஷ்ண பறையனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கிருஷ்ண பறையனாரை கைது செய்ய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ண பறையனார் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் வேனில் ஏற்றி மதுராந்தகம் கொண்டு சென்றனர்.
மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கிருஷ்ண பறையனார் நேற்று முன்தினம் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்தின் போது அவர் மதுராந்தகம் பெண் தாசில்தார் ஆனந்தியை ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியதாகவும் இதை தட்டிக்கேட்ட பெருவழி கிராம நிர்வாக அதிகாரி குமரேசன், தாலுகா அலுவலக ஊழியர் ஜேம்ஸ் ஆகியோரையும் கிருஷ்ண பறையனாரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிருஷ்ண பறையனாரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண பறையனாரைக் கைது செய்தனர்.
கிருஷ்ண பறையனார் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications