திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: தா.பாண்டியன்

தமிழகத்தில் கூட்டணிகள் மாறும் என்றும், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றரீதியிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி வருகிறார்.
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியின் தலைவரான தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறும். இக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநிலக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 3,996 கோடி லாபம் ஈட்டியுள்ள நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. விலை உயர்வுக்கு நஷ்டம் என்பதை காரணமாக கூற முடியாது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். எனவே இந்த இரு கட்சிகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications