வசூலித்த பணம் மாயம்: தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார்
நெல்லை: ஆங்கில வழியில் படிக்க மாதந்தோறும் வசூலிக்கப்படும் பணம் மாயமானதால் தன்னை தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக வள்ளியூர் மாணவர் கலெக்டரிடம் புகார் செய்தார்.
வள்ளியூர் தெற்கு ரத வீதியை சேர்ந்த சுப்பையா ராஜ் என்பவரின் மகன் அபினேஷ். அவர் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வருகிறார். இவர் நேற்று தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு அளித்தார். அதில் அவரது தந்தை குறிப்பிட்டிருப்பதாவது,
எனது மகன் பயிலும் வகுப்பில் ஆங்கில வழிக்காக மாதந்தோறும் தலா ரூ.120 வசூலிக்கின்றனர். கடந்த மாதம் இந்த கட்டணத்தை வசூலிக்குமாறு எனது மகனிடம் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலித்த பணத்தில் ரூ.1500 வகுப்பறையில் காணாமல் போனது. அதை அவன்தான் செலுத்த வேண்டும் அல்லது டி. சி. வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
மேலும் நேற்று நடந்த அறிவியல் தேர்வை எழுத விடாமல் தடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதே மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications