கருணாநிதி மீது கத்தி சொருக காங். தயராகிவிட்டது-நாஞ்சல் சம்பத் பேச்சு
ராமநாதபுரம்: கூட்டணி மாற்றம் என்ற கத்தியை எடுத்து கருணாநிதியின் மேல் சொருக காங்கிரஸ் தயாராகி விட்டது என, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் 2ம் தேதி (2006 ) ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மதிமுக பொதுச் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆகியோரை, மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதி மன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜராகாததால், ராமநாதபுரம் நீதி மன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது.
இதனால், நாஞ்சில் சம்பத் தனது வக்கீல் ஷேக் இபுராகிமுடன் ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க-வை முன்னின்று நடத்த ஆள் இல்லாததால், மாற்றுக் கட்சியில் இருந்து உள்ள சாமி -களை விலை கொடுத்து வாங்கி, பலவீன கட்சியை பலப்படுத்த கருணாநிதி முயற்சி செய்கின்றார்.
கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், பல கோடி ரூபாய் செலவு செய்து விடுமுறை அளித்து, அரசு வாகனங்களை பயன்படுத்தி ஐந்து நாட்கள் செம்மொழி மாநாடு நடத்தினார் கருணாநிதி. இதை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டார்.
ராகுல் காந்திக்கு இயல்பாகவே கருணாநிதியை பிடிக்கவில்லை போலும், அதனால் தான் சென்னை வரும் போது எல்லாம் அவரை மரியாதை நிமித்தம் கூட செனறு பார்ப்பதில்லை. அரசுக்கு எதிரான கூட்டணியை பற்றி சிந்திப்பது ராகுல் காந்தி மட்டும் தான்.
விலைவாசி உயர்வு தமிழக அரசுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வேலையில் சட்டசபை தேர்தல் வருகின்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் பிளவு படும் என்பது மட்டும் உண்மை. கூட்டணி மாற்றம் என்ற கத்தியை கருணாநிதி மேல் சொருக காங்கிரஸ் தயாராகி விட்டது
காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை இலங்கை பிரச்னைக்கு முடிவு வராது. எனவே, சோனியா காந்தியால், தமிழர்களுக்கு பயன் இல்லை. காங்கிரஸ் கட்சியோடு அ.தி.மு.க. கூட்டணி வரும் பட்சத்தில், எங்கள் கருத்தில் உறுதியோடு இருந்து, கூட்டணியில் அமைதியாக இருப்போம் என்றார்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications