Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை எளிய குடிசைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகிறது திமுக-ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: குடிசை வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக துவக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் தற்போது குடிசை அகற்றும் வாரியமாக செயல்படுகிறது. ஏழை, எளிய, குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் சந்திப்பை இணைக்கும் வகையில், ஒன்பது கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த 2007 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், தற்போது மேற்படி உயர்மட்ட சாலை 19 கிலோ மீட்டர் நீளமுள்ளதாக அமையும் என்றும், இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு மறு குடியமர்வுக்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும் தி.மு.க. அரசு அறிவித்து இருக்கிறது.

இத்திட்டத்திற்காக அகற்றப்படும் பகுதிகள் அனைத்தும் குடிசைப்பகுதிகள் ஆகும். இங்கு வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித முன் அறிவிப்பையும் கொடுக்காமல், இரவோடு இரவாக அவர்களின் வீடுகளை காவல் துறையின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.

தாங்களாகவே முன் வந்து தங்கள் இடங்களைத் தருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து கையொப்பத்தினை திமுக ஆட்சியாளர்கள் பெற்றுள்ளனர். பெரும்பாக்கம், ஜோதியம்மாள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து அந்தப்பகுதி மக்களை எல்லாம் நடுத் தெருவில் நிற்க வைத்திருக்கிறது அரசு.

சென்னையில் மட்டும் ஏறத்தாழ 2000 குடிசைப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டும், இந்தப் பகுதிகளிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வாழ் மக்கள் அகற்றப்பட்டு, மிகவும் மோசமான பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். குடிசை மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டிய குடிசை மாற்று வாரியம், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என்ற பெயரில் குடிசைப் பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் என்ற பெயரில், எண்ணூர் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள லட்சக்கணக்கான மீனவ மக்களை அகற்றவும் அரசு முயன்று வருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மீன்பிடித் தொழிலை இழக்கும் அபாயம் மீனவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் “ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்" முக்கிய நோக்கம்.

ஆனால், தி.மு.க. அரசோ இவர்களுக்கு, வாழ்வாதாரத்தையும், குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும் வகையில் தொலை தூரத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கிறது.

சர்வதேச அளவில் மறுவாழ்வு திட்டத்தின் குடியிருப்பு 450 சதுர அடியாக இருக்க வேண்டும். செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற இடங்களில், மூன்று பேருக்கு மேல் குடியிருக்க முடியாத 100 சதுர அடி வீடு தான் குடிசை வாழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி இடங்களில் மருத்துவ வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூட வசதி, போக்குவரத்து வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மொத்தத்தில், குடிசை வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக துவக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் தற்போது குடிசை அகற்றும் வாரியமாக செயல்படு
கிறது. ஏழை, எளிய, குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இல்லையெனில், குடிசை வாழ்மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டக்களத்தில் இறங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+