ரயில் நிலையத்தில் வாலிபரை கொன்ற 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் காதலியைக் கற்பழிக்க முயற்சித்தபோது அதைத் தடுக்க முயன்ற காதலரைக் கொடூரமாக கொன்ற நான்கு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வள்ளீஸ்வரன் தோட்டத்தை சேர்ந்தவர் நான்சி (22). இவர் காதலன் சரவணன் (27). காதலர்கள் இருவரும் கடந்த மாதம் 14-ம் தேதி அன்று கிரீன்வேஸ் பறக்கும் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பால்சன் (25), ராஜி (29), ராஜா (27), ஆறுமுகம் (26) ஆகிய 4 ரவுடிகள் நான்சியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து கோப்ப்பட்ட சரவணன் அவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே அந்த 4 ரவுடிகளும் தங்கள் வீராப்பை காட்ட சரவணனை சரமாரியாக குத்தி கொன்று விட்டனர். நான்சியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 ரவுடிகளையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் பரிந்துரைத்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications