என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 'ஷூ'அணிவது கட்டாயமாகிறது
சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் கண்டிப்பாக ஷூ' அணிந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சி.தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் புகைப்படங்கள் அந்தந்த கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், அனைத்து பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும், புகைப்படத்துடன் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெறப்பட உள்ளன.
வேதியியல் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி செய்யும் மாணவர்கள் அமிலங்களை மிதிக்க நேரலாம், எலக்ட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் மின்சார ஒயர்களை மிதிக்க நேரலாம். அமிலங்கள் மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் ஷூ' அணிவது நல்லது. இந்த முடிவு அவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனுக்கு எப்படி உடையும், காற்றும் இன்றியமையாததோ அதே போன்று மாணவர்களின் பாதுகாப்புக்கு ஷூ' அத்தியாவசியமானது. எனவே, அவர்கள் கட்டாயமாக கல்லூரிக்கு ஷூ' அணிந்து தான் செல்ல வேண்டும். இவ் வழக்கம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications