சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
சென்னை : சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற 51 வகையான நோய்களுக்கு உயர் சிகிச்சைகள் தேவைப்படும் ஏழை-எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் காத்திருக்காமல் உடனடியாக உயர் சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' அறிவிக்கப்பட்டு, 23.7.2009 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்குக் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் உறுப்பினர்களுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துகிறது. இந்த திட்டத்தில் 29.7.2010 வரை 1,59,118 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சிகிச்சைக்காக 429 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதியை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.
தற்பொழுது ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்கு குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் கிராம முன்சீப்கள், விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போன்ற அரசு பொது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.
மேற்கண்ட நபர்களும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உயர் சிகிச்சைகள் பெற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அடையாள அட்டைகள் பெறலாம். இந்த பணிக்காக இம் மையங்கள் 1.8.2010 முதல் 30.9.2010 வரை கூடுதல் கணினி வசதியுடன் செயல்படும்.
அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதிய அட்டையுடனும், பொது நிறுவனங்களில் பணிபுரிவோர், அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளுடன், வருமான சான்றிதழ், குடும்ப அட்டையின் நகலுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடையாள அட்டை பெறுவதற்குள் வேறு ஏதேனும் சிகிச்சை தேவைப்பட்டால், ஓய்வூதிய அட்டையையும், பொது நிறுவனங்களில் பணிபுரிவோர் அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வருமான சான்றிதழ் (ஊதிய சான்றிதழ்) மற்றும் குடும்ப அட்டையின் நகலை சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications