மதுரை ஐகோர்ட் செல்லும் நெல்லை போலீசாருக்கு போலீஸ் கிளப்பில் தங்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வழக்குகளின் பொருட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு செல்லும் நெல்லை மாவட்ட போலீசார் தங்குவதற்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாநகர மற்றும் புறநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்குகளின் பொருட்டு பல போலீசார் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் இருந்து வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் சுழற்சி பணி அடிப்படையில் அங்கு தங்கியிருந்து வழக்குகளின் நிலவரத்தை கண்காணிக்கிறார். தீர்ப்பு மற்றும் வழக்கின் நிலை குறித்த விவரங்களை நெல்லையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதற்காக மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு செல்லும் போலீசாருக்கு தங்குவதற்கு உரிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. தினமும் ரூ. 170 வாடகை கொடுத்து மதுரையில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

பாதிக்கப்பட்ட சில போலீசார் இது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து மதுரை மாநகர கட்டுபாட்டு அறைக்கு அருகேயுள்ள போலீஸ் கிளப்பில் நெல்லை போலீசார் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+