பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்
பழனி பழனி அருகே ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் திருடிய கொள்ளையர்களை யானைகள் துரத்தின. இதில் 7 பேர் தப்பி விட்டனர். 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களை வனத்துறையினர் சென்று மீட்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் மணல் திருட்டு மிகப் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் மணற் கொள்ளையர்களை யானைகள் தாக்கி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி, பாலாறு பொருந்தலாறு பகுதியில், சிலர் லாரிகளில் வந்து மணலை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென யானைக் கூட்டம் அவர்களை வழிமறித்து விரட்டியது. இதைப் பார்த்த லாரித் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களில் 7 பேர் தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் புகுந்து உயிர் தப்பினர். பின்னர் அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்த அடைந்த அவர்கள் தங்களுடன் வந்த 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது யானைகளிடம் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும், யானைகளை விரட்டி விட்டு வனத்துறையினர் மீட்டனர். அவர்களில் ஒருவரை யானைகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
யாரிடமும் சிக்காமல் அட்டகாசம் செய்து வந்த மணற் கொள்ளையர்களை யானைக் கூட்டம் சிறை பிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications