சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி?

Subscribe to Oneindia Tamil

Maoists
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா காட்டுப் பகுதியில் நக்ஸல்களுடன் நடந்த சண்டையில் தேடுதல் வேட்டையி்ல் ஈடுபட்டிருந்த 12 போலீசார் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள குன்யபால் காட்டுப் பகுதியி்ல் 100 பேர் கொண்ட சிறப்புப் போலீஸ் படை இன்று நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சுமார் 200 நகஸ்ல்கள் அவர்களை சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததி்ல் 12 போலீஸார் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு நகஸலும் பலியாகியுள்ளார்.

மேலும் சுமார் 70 போலீசார் முகாமுக்குத் திரும்பவில்லை. அந்தப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் போலீசார் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்புப் படைகள் ஹெலிகாப்டர்களி்ல் விரைந்துள்ளன. ஆனால், கனத்த மழை பெய்து வருவதால் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர்கள் திணறி வருவதாகத் தெரிகிறது.

இதற்கிடையே நக்ஸல்களால் சூழப்பட்ட போலீசாரில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடைசியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதியில் நகஸல்கள் தாக்குதலில் சுமார் 150 பாதுகாப்புப் படையினர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+