மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை விமர்சிக்க அதிமுகவிற்கு நீதி மன்றம் தடை

மதுரை எஸ்.எஸ். காலனி நாவலர் நகரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது,
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாக்கெட் வழங்கினார்.
மேலும், கடந்த மாதம் 30-ம் தேதி நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகளை திருடி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கொடுப்பது போல கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் தா.கி. ஆவி என்ற தலைப்பில் 22 வரி கவிதையும் எழுதப்பட்டிருந்தது.
இந்த கார்ட்டூனை பெரிய அளவில் போஸ்டராக மதுரை நகர் முழுவதும் அதிமுக-வினர் ஒட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே, மத்திய அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இது போன்ற சுவரொட்டிகளை அதிமுக-வினர் ஒட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரத்தினராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியுதாவது,
அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்க முடியாது. ஆனால், அவர்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விமர்சனங்கள் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
எனினும், இந்த வழக்கைப் பொறுத்தவரை ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் முறையாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ரசீதுகளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன், கவிதை தவறானது மட்டுமல்ல, அமைச்சர் மு.க. அழகிரிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே, வரும் 17-ம் தேதி வரை இது போன்ற சுவரொட்டிகளை ஒட்டவும், கேலிச் சித்திரங்களை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications