இரும்புக் கடை ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 23 லட்சம் திருட்டு
சென்னை: மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சென்னை கிண்டி ரயில் நிலையப் பகுதியில், கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி இரும்புக் கடை ஊழியர்களிடம் ரூ. 23 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் இரும்புக் கடை நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். இவரது தம்பி ஷாஜகான். கடை வியாபாரத்தை இவரும் அண்ணனுடன் சேர்ந்து பார்த்து வருகிறார்.
நேற்று இரவு ஷாஜகானும், கடை ஊழியர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் கடை வசூல் பணமான ரூ. 23 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் கிளம்பினர்.
ஆட்டோ, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் போனபோது பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் ஆட்டோ மீது மோதினர். இதையடுத்து ஆட்டோவை நிறுத்தி விட்டு ஷாஜகான் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கும்பலில் இருந்த ஒரு நபர் ஷாஜகான், ஷாகுல் ஹமீது மீது மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டார். இதனால் கண் எரியவே இருவரும் தடுமாறினர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டோவில் இருந்த ரூ. 23 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
மிகுந்த மக்கள் கூட்டமுடைய பகுதியில் இவ்வாறு துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருவதாக துணை ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications