பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியும், வருங்காலத்தில் பெட்ரோலிய கம்பெனிகளே தங்கள் இஷ்டம்போல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அண்மையில் இந்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும், அமைப்புகளும் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
இந்தியாவிலேயே தி.மு.க. அரசு தான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாக குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்வுக்கு முன்பு விற்ற விலையைவிட இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் விலை உயராமல் பார்த்துக் கொண்டுள்ளது. தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்கவில்லை.
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறினால் மட்டும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கட்டண விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார். இதற்கு மட்டும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் முதல்-அமைச்சர், பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?
பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்தகட்டமாக திருச்சியில் 6-ந் தேதி காலை 11 மணியளவில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தே.மு.தி.க. துணைச்செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications