சன் டிவி நிருபர் மீது கொங்கு கட்சியினர் தாக்குதல்-பத்திரிக்கையளர்கள் ஆர்பாட்டம்
ஈரோடு: சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் நடைபெற்ற மோதலை படம் பிடித்த சன் டிவி நிருபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் சுதந்திர போராட்ட தியாகி தீரன்சின்னமலை-க்கு மணி மண்டபம் உள்ளது. தீரன்சின்னமலை தூக்கிலிடப்ட்டத்தை நினைவு கூறும் வகையில் நேற்று காலை அரசு விழா நடைபெற்றது.
மாலையில் கொங்கு கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் வகையில் நிழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று காலையில் அரசு விழா முடிந்த நிலையில், கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் மணி மண்டபத்தில் அதன் கொடி பறக்க விடப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ.தனியரசு கடும் கண்டனம் தெரிவித்து அந்த கொடியை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது.
இதில் அந்த வழியாக சென்ற பஸ்கள் லாரிகளை அடித்து உடைக்கப்பட்டது. இதை சன் டிவி நிருபர் குணசேகரன் படம் பிடித்தார். இதைக் கண்டு ஆவேசம் அடைந்த வன்முறை கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், சன் டிவி நிருபர் குணசேகரன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மின் வாரியம் முன்பு இன்று மாலை 4 மணி அளவில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் வன்முறை கும்பலை செய்து செய்ய கோரினர். ஆர்பாட்ட முடிவில் , ஈரோடு மாவட்ட எஸ்பி - ஜெயசந்திரனிடம் சன் டிவி நிருபர் தாக்கியவர்களை கைது செய்யக் கோரி மனு அளித்தனர்.
முன்னதாக தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த குணசேகரனை பார்க்க கொங்கு நாடு முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வருகை தந்த போது, அடித்து விட்டு ஆறுதல் தேவையில்லை என்று கூறி அவரை பார்க்க விடாமல் நிருபர்கள் தடுத்தனர். இதனால் அவர் சன் டிவி நிருபரை சந்திக்கமுடியாமல் வெளியேறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications