நெல்லை அண்ணா பல்கலை. முதல் பட்டமளிப்பு விழா: உரையாற்றும் ஸ்டாலின்
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா வரும் 7-ம் தேதி மாலை நடக்கிறது. இதில் 1040 பேர் பட்டம் பெறுகின்றனர். விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் குமரி, தூத்துக்குடி பொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2007-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா வரும் 7-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். விழாவில் 1040 பேர் பட்டம் பெறுகின்றனர்.
இதில் 547 பேர் ஆண்கள், 493 பேர் பெண்கள். விழாவில் நேரடியாக 152 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 80 பேர் ஆண்கள், 72 பேர் பெண்கள். இவர்களில் 52 பேர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர்கள்.
பட்டம் பெறுபவர்கள் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 76 பொறியியல் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், இசிஇ, இஇஇ, எம்டெக், பயோடெக்னாலஜி, எம்.பி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளில் படித்தவர்கள்.
மேலும் பொறியியல் கல்லூரி வாளகத்தில் ரூ.7.44 கோடியி்ல் அமைக்கப்படும் நெல்லை அண்ணா பல்கலைக்கழக புதிய நிர்வாக கட்டிடம், நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் அருகே 25 ஏக்கர் பரப்பரளவில் ரூ.19.50 கோடியில் அமைக்கப்படும் நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பின்புறம் 25 ஏக்கரில் ரூ.19.50 கோடியில் அமைக்கப்படும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றிக்கும் துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications