தூத்துக்குடி துறைமுகத்தில் கம்யூட்டர் கழிவுகள் பறிமுதல்: அதிகாரிகள் மீட்பு
தூத்துக்குடி: துபாய், மாலத்தீவு நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கதிர்வீச்சு தன்மை கொண்ட எலக்ட்ரானிக் கழிவுகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கன்டெய்னர்களின் ஆவணங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் துபாயில் உள்ள அஜ்மான் என்ற இடத்தில் இருந்த கேரள மாநிலம் கலூரைச் சேர்ந்த ஆரோ வெண்ட் என்ற நிறுவனத்திற்கு வந்த கன்டெய்னரில் பயன்படுத்த முடியாத கம்யூட்டர் மானிட்டர் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவை கதிர்வீச்சு தன்மை கொண்டது என தெரிய வந்தது.
மேலும், மாலத்தீவில் இருந்து கோவை அம்பாள் டிரேடர் என்ற நிறுவனத்திற்கு வந்த மற்றொரு கன்டெய்னரின் ஆவணங்களில் இரும்புக் கழிவுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை போட்டனர். அப்போது அதில் யூ.பி.எஸ்., இன்வெர்டர், ஜெனரேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நிக்கல் கேட்னியத்தாலான 133 பழைய பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று துபாயில் இருந்து கேரள மாநிலம் கோட்டையம் கீழ்காட்டில் என்ற மில்லுக்கு வந்த கன்டெய்னரை சோதனையிட்டதில் அதில் தடைவிதிக்கப்பட்ட 148 கேட்னியம் பேட்டரிகள் இருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications