உணர்வுகளை வெளிப்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டமா?-வைகோ பாய்ச்சல்
சென்னை: உணர்வுகளை வெளிப்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டமா. அப்படியானால், சீமான் பேசியதை நானும் அப்படியே வழிமொழிகிறேன். என் மீதும் பாயட்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கருத்துரிமைக் களம் அமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
4வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்றிருப்பினும், மீண்டும் ஒரு போர் எழும். அதற்கு தாய் தமிழகம் தோல்கொடுக்கம் காலமும் வரும். தமிழகத்தில் தற்போது பேசுவதற்கு உரிமை கிடையாது. சுவரொட்டி ஒட்டுவதற்கு உரிமை கிடையாது. எங்கள் நெஞ்சத்தில் நேசிக்கின்ற பிரபாகரனின் படத்தை கையில் தூக்கிச் செல்வதற்கு அனுமதி கிடையாது. குறுஞ்செய்தி வெளியிடுவதற்கு அனுமதி கிடையாது.
ஈழ விடுதலை களத்தை குறித்து, முள்ளிவாய்க்கால் துன்பம் குறித்து, ராஜபக்சே கூட்டத்தின் கோர திருவிளையாடலைக் குறித்து குறுஞ்செய்தி அனுப்பிய தோழர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மேடையில் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி பேசினார்கள். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைப் பற்றி பேசினார்கள். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களை நான் சந்தித்து கேட்டபோது, 'வழக்கம் போல எங்கள் படகுகளில் இலங்கை கடற்படையினர் குதித்தார்கள். மீன்களை அள்ளிச் சென்றார்கள். வலைகளை அறுத்தார்கள். கைபேசிகளை பறித்துக்கொண்டார்கள். அவர்களின் துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் எங்கள் சட்டையை கிழித்தார்கள். எங்கள் உள்ளாடைகளை கழற்றச் சொன்னார்கள். நாங்கள் தயங்கினோம். கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் எங்கள் உள்ளாடைகளை நாங்களே கழிற்றினோம். நாங்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டோம். எங்களை அதே படகில் பூட்ஸ் காலால் மிதித்தார்கள். எங்கள் காதுகளில் ரத்தம் வழிந்தது. இப்படிப்பட்ட கொடுமையால்தான் செல்லப்பன் என்ற மீனவர் இறந்துபோனார்' என்றனர்.
இலங்கையில் நம் சகோதர், சகோதரிகளை சுட்டு கொன்றது மட்டுமல்ல. படுகொலை செய்யப்பட்டதுமல்ல. நம் இளம் சகோதரிகளின் கற்பை சூறையாடியது மட்டுமல்ல. பெண் விடுதலைப்புலிகள் அணிந்திருந்த சீருடைகளை அப்புறப்படுத்தி, மிருகங்கள் செய்யத் துணியாத செயல்களை செய்தான். லட்சத் தமிழர்களை நிர்வாணப்படுத்திதான் சுட்டான்.
இங்கே ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம். அலைகடலுக்கு அப்பால் இருக்கிறோம். இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் நம் கடல் பகுதிக்குள் நுழைந்து, தமிழக மீனவர்களை சுடுவதுமட்டுமல்ல. அவனை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள். ஒரு நாள், இரு நாள் அல்ல.
இவ்வளவு படுகொலைகளையும் செய்து விட்டு, சிங்களவர்கள் இங்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். இது கேரளாவில் நடக்குமா? ஆந்திராவில், கர்நாடகாவில், மராட்டியத்தில், பஞ்சாப்பில், வங்கத்தில் நடக்குமா? வேறு எங்காவது நடக்க முடியுமா? நடமாட விடுவார்களா?
அந்த ஆத்திரத்தில் எங்கள் மக்களை கொன்றுவிட்டு, எங்கள் சகோதர்களை வந்து தாக்குகிற அந்த கொலைக்காற ரத்த காட்டேரியின் கூட்டம் இங்கும் உலவுவதா? எந்தனை நாட்களுக்கு நாங்கள் அனுமதிப்போம். கணக்கெடுத்து வைத்திருக்கிறோம் என்று சீமான் பேசினார். என்ன தவறு?
நியாயமான உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டமா? சிறையில் பூட்டுவதா? சீமான் சொன்னதையே நானும் சொல்கிறேன். என் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சொல்லுவோம். நமது கடமை முடிந்து விடவில்லை. தாய் தமிழக மக்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும் சொல்லுவேன், நம் வாழ்நாளிலே எதை காண விரும்புகிறோம். தமிழனுக்கு ஒரு தேசம் மலரட்டும். அது தமிழீழ தேசமாக மலரட்டும். அது அழிந்துவிட்டது என்று கருத வேண்டாம். அழிவின் பிடியிலிருந்து மீண்டும் எழும். சிந்தப்பட்ட ரத்தம் வீண் போகாது. செய்யப்பட்ட தியாகம் வீண்போகாது. நிச்சயம் ஈழம் வரும். அதற்கு இந்த தாய் தமிழகம் தோல் கொடுக்கும் காலம் வரும் என்றார் வைகோ.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications