தீவிரவாதிகளுடன் எஸ்.பி.க்கு தொடர்பு: விசாரிக்க என்.ஐ.ஏ.க்கு உத்தரவு
திருவனந்தபுரம்: தீவிரவாத இயக்கங்களுடன் எஸ்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கொச்சி சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நீதிமன்றதிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடித்ததில் கேரளாவில் பல உயர் போலீ்ஸ் அதிகாரிகள் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். இதில் எஸ்.பி. ஒருவரும் அடக்கம்.
கண்ணூர் எடக்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது. அப்போது குறிப்பிட்ட அந்த எஸ்.பி. நேரடியாக அந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும் போதும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. ஆனால் அந்த எஸ்.பி.யிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை விட்டு விட்டனர்.
இது தவிர வாகமன் பகுதியில் நடந்த சிமி இயக்கத்தின் ஆயுத பயிற்சி முகாம், எர்ணாகுளம் பாணாய்குளத்தில் நடந்த தீவிரவாத கூட்டத்தின் ரகசிய கூட்டம் ஆகிய சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு கொச்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications