சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறல்: குற்றாலத்தில் போலீசார் அட்டகாசம்
குற்றாலம்: சுற்றுலா பயணிகளிடம் தங்களது வீரத்தை காட்டும் போலீசாரால் பயணிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் களை கட்டும். இங்கு சீசனை அனுபவிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
இங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் இந்த சீசன் காலங்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுவதும் போதிய போலீசார் இல்லாமல் அருவிகளில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் குறிப்பிடத்தக்கது.
எந்த ஆண்டையும் போல் அல்லாமல் குற்றாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவது வேதனையான விஷயம். மெயின் அருவியில் குளிக்க வருபவர்களையும் சரி, குளிப்பவர்களையும் சரி போலீசாரின் லத்தி பதம் பார்க்காமல் விடுவதில்லை. அதையும் மீறி கேள்வி கேட்டால் பலத்த கவனிப்புகளுக்கும் பஞ்சமில்லை.
மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் போலீசாரை பெயரளவுக்கு நியமித்து விட்டு ஆண் போலீசார் அங்கே பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆண் போலீசார் பெண்கள் குளிக்கும் பகுதிக்குள் எல்லை மீறி செல்வதால் தேவையற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வேதனை அடைகின்றனர். மேலும் இங்கு குளிக்க வி.ஐ.பி.கள் வந்துவிட்டால் குளி்த்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் குளித்து முடிக்கும் வரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய சம்பவங்களும் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications