86 கைதிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட 86 கைதிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் தடா கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது 9 தடா கைதிகள் இருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசாரும், சிறைத் துறை காவலர்களும், சிறைக்குள் புகுந்து தடியடியில் இறங்கினர். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் 86 கைதிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்போதைய தடா கோர்ட் நீதிபதி சிறைக்குச் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் 95-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் போலீசாரின் தாக்குதலுக்கு சிறையில் இருந்த அப்பாவி கைதிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அளித்த அளித்த தீர்ப்பில் காயம் அடைந்த 86 கைதிகளுக்கும் அவர்களது காயத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் என்ற வீதத்தில் 6 சதவீத வட்டியுடன் தமிழக அரசு நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications