நித்தியானந்தா மடத்தில் சேர வேண்டும்-டிஜிபியிடம் பெண் சீடர் புகார்
சென்னை: நான் நித்தியானந்தா மடத்தில் சேர விரும்புகிறேன். ஆனால் எனக்கு மிரட்டல் வருகிறது. எனவே பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி டிஜிபி லத்திகா சரணிடம் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
கிரிஜா என்பவர் நித்தியானந்தாவிடம் சீடராக இருந்தவராம். இடையில், ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்தியானந்தா செய்த லீலைகள் குறித்த பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரிஜாவை அவரது பெற்றோர் நித்தியானந்தா மட்ததிலிருந்து கூப்பிட்டு வந்து விட்டனர். தற்போது மீண்டும் நித்தியானந்தாவுடன் சேரத் துடிக்கிறார் கிரிஜா. ஆனால் வீட்டினர் மிரட்டுவதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரணிடம் புகார் கொடுத்த அவர் கூறுகையில்,
எனக்கு சொந்த ஊர் சென்னை திருவொற்றியூர். 27 வயதாகிறது. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனது 2 சகோதரர்கள் தங்க நகைகள் செய்யும் வேலை செய்கிறார்கள்.
நான் கடந்த இரண்டரை வருடங்களாக நித்யானந்தா சாமியாரின் பெங்களூர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள நான், ஆசிரமத்தில் ஆன்மிக சேவை புரிந்தேன்.
நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஒரு ஆசிரமவாதியாக தான் இருந்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் என்னைப்போல் 60 பெண் சீடர்கள் உள்ளனர். சுமார் 200 பேர் அங்கு தங்கியிருக்கிறார்கள். நித்யானந்தாவின் ஆசியோடுதான் நான் சன்னியாசம் பெற்றுள்ளேன்.
ரஞ்சிதாவோடு இணைத்து நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியவுடன் எனது பெற்றோர்கள் வற்புறுத்தலின் பேரில், நான் திருவொற்றியூர் வந்துவிட்டேன்.
இப்போது எனது சன்னியாசினி கோலத்தை கலைத்துவிடும்படி எனது பெற்றோர் சொல்லுகிறார்கள். எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். நான் திருமணத்துக்கு மறுத்துவிட்டேன். நான் மீண்டும் ஆசிரமம் செல்ல விருப்பமாக உள்ளேன்.
ஆசிரமம் சென்றால் நித்யானந்தா மீது புகார் கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியதால் நான் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
எனது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது. அதன்படி நான் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்லுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கேட்டுதான் நான் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications