6 மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்-கருணாநிதி உத்தரவு
சென்னை: மதுரை, கோவை, விருதுநகர், திருப்பூர், சிவகங்கை, நாகப்பட்டனம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் மற்றும் குடிநீர்த் திட்டங்களை விரைவுபடுத்த முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள் மற்றும் 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 173 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் இராச பாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
190 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருது நகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக் கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 755 குடியிருப்பு களுக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.
784 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மதுரை மாவட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.
224 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 965 ஊரகக் குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் என 5 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும், மொத்தம் 1711 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications