பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும்-வைகோ
மதுரை: பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தலில் இருந்து தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வார இதழ் ஒரு சிலரின் வன்முறையையும், அதனால் ஏற்பட்ட திரைமறைவுச் சம்பவங்களையும் செய்தியாக வெளியிட்டது.
இதற்காக அந்த பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும், வன்முறைச் சம்பவங்களும் நடக்கக்கூடும் என்றும் தங்கள் அச்சுறுத்தலை பகிரங்கமாக விளம்பரமாகவே சிலர் வெளியிட்டுள்ளனர்.
அந்த இதழை மிரட்டும் வகையில் மதுரை முழுக்க சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினருக்கும், செய்தியாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தோர், அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
பத்திரிக்கைகளை மிரட்டுகின்றவர்களையும், அதற்குத் துணை போகும் அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளைத் தடுக்கவும், பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டியது அரசின் உடனடி கடமையாகும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications