தோண்ட தோண்ட ஊழல்... கல்மாடியை விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நடந்து வரும் ஏற்பாடுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய தணிக்கைத் துறை செய்த ஆய்வில் எந்தெந்த வழிகளில் எல்லாம் ஊழல் நடந்துள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த ஊழலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை உடனடியாக போட்டிக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால் கல்மாடி காங்கிரஸ்காரர் என்பதால் மத்திய அரசு இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறது. போட்டி ஏற்பாடுகளில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகும், இதில் பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்காததால், போட்டியில் பங்கேற்க உள்ள 70 நாடுகளும், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் முயற்சிகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக அவர்கள் போட்டி ஏற்பாடு குழுக்களில் இருந்த தர்பாரி, சஞ்சய் மொகிந்தி ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
அடுத்து இந்த ஊழலுக்கு நிதி பரிமாற்றம் நடந்த வங்கிகளில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி லண்டனில் உள்ள ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதில் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களின் நிதி பரிமாற்ற விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
லண்டனில் உள்ள பாஸ்ட் டிராக் நிறுவனத்துக்கு காமன்வெல்த் அமைப்பும், போட்டி ஒருங்கிணைப்புக்குழுவும் சாதகமாக நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ரூ. 208 கோடி ஒப்பந்தப்படி பி.பி.சி. டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 15 சதவீதம் கமிஷனாக கைமாறியுள்ளது. இந்த கமிஷன் பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. இது சுரேஷ் கல்மாடிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கல்மாடியிடமும் விசாரிக்க முடிவு...
சுரேஷ் கல்மாடியிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆனால் அவரிடம் உடனடியாக விசாரணை நடைபெறுமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.
அக்டோபர் 12-ந்தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முடிகின்றன. அதன் பிறகு கல்மாடி உடனடியாக விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கருவி வாங்கியதிலும்...
இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்திருப்பதாக மற்றொரு புகார் பரபரப்பாக எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தேசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.கே.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
போட்டியை காண்பிக்கும் வீடியோ ஸ்கிரீன்களை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும் என்று சுரேஷ் கல்மாடி உத்தரவிட்டார். இந்த வீடியோ ஸ்கிரீன்கள் சராசரி கடைகளில் விற்கப்படும் விலையைவிட 4 மடங்கு அதிகம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாம்.
இதே போல்தான் மற்ற பொருட்கள் வாங்குவதிலும் ஊழல் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. தேசிய போட்டி அமைப்புக் குழு தலைவரே குற்றச்சாட்டுக்களை கூறி இருப்பதால் சுரேஷ் கல்மாடி பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications