சுதந்திர தினம் முதல் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அமல்!

முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் முதல் கட்ட பயனாளிகளுக்கு இதற்கான ஆணைகளை வழங்குகிறார்.
தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் திருச்சியில் முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.
கிராமப் பகுதிகளில் 6 ஆண்டுகளில் சுமார் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டிக் கொடுக்கும் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ.1,800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டது.
தலா ரூ.60,000த்தில் கட்டப்படும் இந்த வீடுகளை பயனாளிகளே கட்டிக் கொள்ளலாம். இந்த வீட்டுக்கு தேவைப்படும் சிமெண்ட், கம்பிகள் ஆகியவற்றை அரசு வழங்கும்.
இந்த வீடு கட்டும் திட்டத்திற்கான பணிகள் நாளை மறுநாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் பயனாளிகளுக்கு இதற்கான ஆணைகளை முதல்வர் வழங்குகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம் 31 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் நாளை மறுதினம் முதல்வர் வழங்குவார்.
இத் தகவலை ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியுடன் நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவதுடன், நாட்டிலேயே முதல் குடிசையில்லா மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும்.
சுதந்திர தினத்தையொட்டி இதன் துவக்க விழா நடைபெறுகிறது. வீடு வழங்கும் திட்டத்தில் சேரும் பயனாளிகளை மாவட்டந்தோறும் கணக்கெடுக்கும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications