சுதந்திர தினத்தையொட்டி 31 கோவில்களில் பொது விருந்து-அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள 31 திருக்கோவில்களில் பொது விருந்து நிகழ்ச்சிக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய சுதந்திர தின விழா நாடெங்கும் 15.08.2010 அன்று கொண்டாடப்பெறுகிறது.
இச்சுதந்திர தினவிழாவினையொட்டி தமிழகத்தில் பக்தர்களிடமும், பொது மக்களிடமும் சமுதாய ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைவரும் பங்கேற்கும் வகையில், சாதிசமய ஏற்றத்தாழ்வின்றி, தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடும், நண்பகலில் பொதுவிருந்து நிகழ்ச்சியும் பல ஆண்டுகளாக இத்துறையின் முக்கிய நிகழ்ச்சியாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.
சென்னையில் 31 முக்கிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடும், நண்பகலில் பொதுவிருந்து நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்நிகழ்ச்சிகளில் சாதிசமய வேறுபாடின்றி அனைத்து இனமக்களுடன், மாண்புமிகு அமைச்சர், பெருமக்களும், வணக்கத்திற்குரிய மேயர் அவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்களும் பங்கு கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழா தொடர்பான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த திருக்கோயில் நிர்வாகிகளும், அறங்காவலர்களும் கவனித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர்கள் விவரம்...
1. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4 -சபாநாயகர் இரா.ஆவுடையப்பன்
2. அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை-84.- மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி
3. அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு -போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு,
4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை-41 சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
5. அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை 79 ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி
6. அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை- 15.-வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,
7. அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை.-சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ் ராஜன்,
8. அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை -செய்தி மற்றும் விளம்பரத் துறை பரிதி இளம்வழுதி
10. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -குடிசைமாற்று வாரியம் அமைச்சர் சுப. தங்கவேலன்,
11. அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை அ/மி. கமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு, சென்னை- . பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ். ஆர்.இராமச்சந்திரன்
12. அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
13. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை-26. -அறநிலையத் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன்,
14. அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவேட்டீஸ்வரன்பேட்டை,சென்னை-5-பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
15. அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், கே.கே.நகர்,சென்னை-78 -வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜ்,
16. அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-5. மு.பெ.சாமிநாதன்,நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
17. அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், ராசப்பசெட்டித்தெரு, சென்னை-03. -தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை,
18. அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு,சென்னை 107 -சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன்,
19. அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை -4. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி,
20. அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவெற்றியூர், சென்னை-19 -மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி,
21. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, சென்னை -3 -பால் வளத்துறை அமைச்சர்.உ .மதிவாணன்
22. அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், திருநீர்மலை, -கதர்துறை அமைச்சர் க.இராமச்சந்திரன்
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications