திருச்சியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்-வருகிறார் ஜெ.
திருச்சி : திருச்சியில் நாளை நடைபெறவுள்ள அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கிப் பேசுகிறார். இதையடுத்து திருச்சி அதிமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகளாக காணப்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தானே ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
அந்த வகையில் நாளை திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார்.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனை, மீனவர் பிரச்சினை, மணல் கொள்ளை ஆகியவற்றை கண்டித்து திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் பெரும் திரளாக வருகை தரவுள்ளனர்.
இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த காஜாமியான் பள்ளி, திருச்சி இரும்பு உருக்காலை உள்பட 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா கூட்டத்திற்கான பாதுகாப்புப் பணிகளை கவனிக்க போலீஸாரை நம்பாமல் அதிமுகவே தனியாக தொண்டர் படையை ஏற்பாடு செய்துள்ளது, அவர்களுக்கு தனி சீருடையும் தரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சதியிலேயே முகாமிட்டு போராட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெயலலிதா தனி விமானம், நாளை மாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்கிறார். பிறகு, கார் மூலம் சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக ஜி கார்னர் மைதானம் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றார்.
மதுரை, நெல்லையிலும்...
திருச்சி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரையிலும், அடுத்து நெல்லையிலும் ஜெயலலிதா தலைமையில் கண்டனக் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அல்லது மதுரை கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications