அனுமதியின்றி வெளியே சென்ற கத்தார் விமானி மீது நடவடிக்கை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து அனுமதியின்றி வெளியே சென்ற கத்தார் ஏர்வேஸேசின் வங்கதேச விமானி உடனடியாக கத்தாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
கத்தார் நாட்டில் இருந்து நேற்று முன்தினம் காலை திருவனந்தபுரத்திற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் வந்தது.
இதன் விமானியான வங்கதேசத்தை சேர்ந்த முகமது மிசானூர் ரகுமான், விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் திருவனந்தபுரம் அருகே வழுதகாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஈரான், இலங்கை நாடுகளை சேர்ந்த விமானிகள் இந்தியா வந்தால் விமான நிலைய அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இதை ரகுமான் மீறியதால் விமான நிலைய அதிகாரிகள் வலியதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று வி்மானியை பிடித்து விமான நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் உடனடியாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications