சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு
சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர்.
இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் 3 கோவில்களில் அம்மன் சிலை பால் குடித்த தாக பரபரப்பான தகவல் பரவியது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், பூந்தமல்லி பாணவேடு தோட்டத்தில் உள்ள மாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலைக்கு பக்தர் ஒருவர் பால் கொடுத்தார். ஒரு சிறிய ஸ்பூனில் பாலை எடுத்து அம்மன் வாயில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த பாலை சிலை உறிஞ்சியது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் படையெடுத்து வந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று அம்மனுக்கு பால் கொடுத்து பரவசமடைந்தனர்.
இதேபோல பாரிவாக்கம் கிராமத்தில் கொல்லாபுரி மாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களில் உள்ள அம்மன் சிலைகளிலும் பால் குடிப்பதாக தகவல் பரவியது. இங்கும் மக்கள் படையெடுத்தனர்.
3 அம்மன் கோவில்களிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டது. விடிய விடிய 3 கோவில்களுக்கும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. பல பெண்கள் ஆவேசமாக சாமியாடி குறி சொன்னார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications