சரத் பொன்சேகா குற்றவாளி-இலங்கை ராணுவ கோர்ட் தீர்ப்பு
கொழும்பு : இலங்கை முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு குற்றவாளி என்றும் பொன்சேகாவுக்கு எதிராக அமைக்கப்பட்ட முதல் ராணுவ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ராணுவச் சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என ராணுவ கோர்ட் அறிவித்துள்ளது. தீர்ப்பை ராஜபக்சேவின் ஒப்புதலுக்காக ராணுவ கோர்ட் அனுப்பி வைத்துள்ளது.
இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமானால் ராணுவம் சார்பில் அவர் வசமுள்ள ஜெனரல் உட்பட்ட சகல அந்தஸ்துகளும் நீக்கப்படும். இருப்பினும் ராஜபக்சே நினைத்தால் இந்த தீர்ப்பை நிராகரிக்க முடியும் எனத் தெரிகிறது.
தீர்ப்பை அளித்துள்ள ராணுவ கோர்ட் தண்டனை விவரத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.
நான்காவது ஈழப் போர் முடிவடைந்த சில காலத்திற்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும், பொன்சேகாவுக்கும் இடையே பெரும் தகராறு மூண்டது. போரின் வெற்றியை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பாக இவர்களுக்குள் மோதல் மூண்டது. குறிப்பாக பொன்சேகாவை கறிவேப்பிலை போல தூக்கிப் போட்டு விட்டனர் ராஜபக்சே சகோதரர்கள். இதையடுத்து அவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி ராணுவ கோர்ட்களையும் அமைத்தது ராஜபக்சே அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications