சிறை காவலர்களை கண்டித்து பாளை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லை: பாளை சிறையில் கைதியை காவலர்கள் தாக்கினர். இதனால் கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர்.
நெல்லை தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்தவர் குமுளி என்ற ராஜ்குமார். இவர் மீது மதுரையி்ல் கொலை மற்றும் வெடிகுண்டு வைத்த வழக்கு, தச்சநல்லூரில் சில வழிப்பறி வழக்குகளும் உள்ளன. பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நேற்று முன்தினம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். திரும்பி வரும்போது ராஜ்குமார் படிப்பதற்காக கடையில் வார பத்திரிக்கை வாங்கினார். அதனை சிறைக்குள் கொண்டு செல்ல பாளை சிறை காவலர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து ராஜ்குமாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்குமார் சிறை வார்டனை தி்ட்டினார். இதையடுத்து சிறை காவலர்கள் அவரது அறைக்கு சென்று ராஜ்குமாரை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் மற்றும் 2வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 50 பேர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் (பொறுப்பு) கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் சாப்பிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications