இந்து முன்னணி சார்பில் கொடி கம்பம் நட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி
ஓசூர்: சுதந்திர தினத்தை கொண்டாட இந்து முன்னணி சார்பில் கொடியேற்ற திட்டமிட்டனர். அதற்காக கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட திட்டமிட்டனர். எனவே, அப்பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வந்த உதயகுமார் (22) என்பவர் இரும்பால் ஆன பைப் ஒன்றை குழி தோன்றி நட்டுக் கொண்டிருந்தார். பைப்பை நட்டபோது அது மின்சார ஒயருடன் உரசியது. இதில் இரும்பு பைப்பின் மூலம் மின்சாரம் பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிர் இழந்தார்.
இதை பார்த்த அண்ணாமலை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த்(32), காமராஜ் நகரைச் சேர்ந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (28) ஆகிய இருவரும் உதயகுமாரை காப்பாற்ற சென்றனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிப்காட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகமாக காணப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications