சட்டவிரோத சுரங்கங்களை கட்டுப்படுத்த கமிஷன் அமைத்தது மத்திய அரசு
டெல்லி: சட்டவிரோதமாக நடந்து வரும் சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்ட கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு.
இதுதொடர்பாக 18 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும், அந்த கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுரங்கத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் நடத்திய பல சுற்று ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த கமிஷன் அமைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்டுவது தொடர்பான அனைத்து அறிவுரைகளையும், வழிமுறைகளையும் இந்த கமிஷன் அரசுக்கு பரிந்துரைக்கும்.
கர்நாடகா போன்ற மாநிலங்களில் சட்டவிரோத சுரங்கத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆராயவுள்ளது மத்திய அரசு அமைத்துள்ள கமிஷன்.
விரைவில் கமிஷன் உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்படும் என மத்திய சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழில் பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களின் கையில்தான் இப்போதைய கர்நாடக பாஜக ஆட்சியே சிக்கிக் கிடக்கிறது. ரெட்டிகளுக்கு எதிராக அங்கு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் சமீபத்தில் போர்க்கொடி தூக்கியது நினைவிருக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications