ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருள் பாக்கெட் விலை குறைப்பு
சென்னை: ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரசு வழங்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அளவையும் குறைத்து விட்டனர்.
ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் 10 மளிகைப் பொருட்களைக் கொண்ட பாக்கெட்டை அரசு ரூ. 50க்கு வழங்கி வருகிறது. இதில் கடுகு, மிளகு, சீரகம் உள்பட 10 பொருட்கள் இடம் பெற்றிருக்கும். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இதன் விலை மற்றும் அளவை குறைத்துள்ளனர்.
.
அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்கு, மானிய விலையில் வழங்கப்படும் 10 மளிகைப் பொருள்கள் உள்ள பாக்கெட்டின் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சொன்னதைச் செய்வோம் சொல்வதைச் செய்வோம் என்ற வாசகங்களுடன் முதல்வர் கருணாநிதியின் படத்துடன் கூடிய இந்த பாக்கெட்களில், ஒரு பெண் அஞ்சறைப் பெட்டியில் இருந்து மளிகைப் பொருள்களை எடுத்து வாணலியில் சமைப்பது போன்ற வண்ணப் படத்துடன் பத்துப் பொருள்கள் ரூ. 25 என்று பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.
விலை குறைந்ததே என்று மக்கள் மகிழ்ந்தாலும், உள்ளே உள்ள பொருட்களின் அளவும் குறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.
இந்த மளிகைப் பொருட்களின் புதிய அளவும், பழைய அளவும் (அடைப்புக்குறிக்குள்):
(அனைத்தும் கிராம்களில்)
மிளகாய் தூள் 100 (250)
மல்லித்தூள் 50 (250)
கடலைப் பருப்பு 50 (75)
உளுத்தம்பருப்பு 25 (50)
மஞ்சள் தூள் 50 (50)
வெந்தயம் 25 (25)
கடுகு 25 (25)
மிளகு 25 (25)
சீரகம் 50 (50)
கரம் மசாலா தூள் 10 (10)
மஞ்சள் தூள், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், கரம் மசாலா தூள் ஆகியவற்றின் அளவு குறைக்கப்படவில்லை. மற்ற 4 பொருட்களின் அளவையும் குறைத்து விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications