சோப்ராஜின் மனைவி என்பதை நிரூபிக்குமாறு நேபாள பெண் நிகிதாவுக்கு உத்தரவு

சர்வதேச அளவில் பல கொலைகள், கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர் இந்தியாவில் பிறந்தவரான சோப்ராஜ். பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர். தற்போது சோப்ராஜ் நேபாள சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சோப்ராஜின் காதலி நிகிதா பிஸ்வாஸ். இவர் நேபாள நாட்டுக்காரர். இவரைத்தான் தனது மனைவி என்று சோப்ராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 1975ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கோனி ஜோ பிரான்ஸிக் என்பவரைக் கொன்ற வழக்கில் சோப்ராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமீபத்தில் நேபாள உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளைப் பார்த்து நிகிதாவின் தாயாரும், சோப்ராஜின் வக்கீலுமான சகுந்தலா தாபா ஆவேசமாக பேசினார். நிகிதாவும் ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து அவர் மீதும், நிகிதா மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது நிகிதாவுக்கு 22 வயதாகிறது, சோப்ராஜுக்கு 66 வயதாகிறது. இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் மிக மிக அதிகமாக உள்ளது. எனவே நிகிதாவை, சோப்ராஜின் மனைவி என்று எப்படி நம்புவது என்று நீதிபதிகள் ராம் குமார் பிரசாத் ஷா மற்றும் பலராம் கேள்வி எழுப்பினர்.
மேலும், இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான எந்த சான்றும் இல்லை, ஆவணமும் இல்லை. அப்படி இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும், தனது திருமணத்தை நிகிதா நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2008-ம் ஆண்டு சோப்ராஜை காத்மாண்டுவில் உள்ள மத்திய சிறையில் நிகிதா சந்தித்து உள்ளார். நேபாளத்தில் கொண்டாடப்படும், தஹ்ஹைன் என்ற மத திருவிழாவின் போது நேபாளத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கைதிகளை பார்க்க அனுமதிப்பது வழக்கம். அப்போது தான் நிகிதா, முதல் முறையாக சோப்ராஜை சந்தித்துப் பேசினார். இதையடுத்து பார்த்தவுடன் அவர் மீது நிகிதாவுக்கு காதல் வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நீதிபதிகளைப் பார்த்து ஆவேசமாக பேசியதைத் தொடர்ந்து சகுந்தலாவுக்கும், நிகிதாவுக்கும் ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இருவரும் உடனடியாக நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து இதுகுறித்து ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
பிகினி கில்லர் என்பதுதான் சார்லஸ் சோப்ராஜின் செல்லப் பெயர். 70களில் இவரது அட்டகாசம் உலக நாடுகளைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. இளம் பெண்களை, குறிப்பாக நீச்சல் உடைப் பெண்களை மயக்கி கொலை செய்வது இவரது ஹாபியாக இருந்தது.
தற்போது 66 வயதாகும் சோப்ராஜின் தந்தை இந்தியர். தாயார் வியட்நாமைச் சேர்ந்தவர். அமெரிக்கப் பெண் கொலை வழக்கில் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை (20 வருடங்கள்) விதிக்கப்பட்டது. அதில் 7 வருடங்களை அவர் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications