வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ்

Subscribe to Oneindia Tamil

Venezuela Airport
கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது.

அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை.

போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த விமானத்தை விமான நிலையத்தின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.

விமானம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+