கள் இறக்க அனுமதிக்க கோரி இன்னா நாற்பது என்ற பெயரில் போராட்டம்!
கோவை: தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க கோரி, செப்டம்பர் 15 ம் தேதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இருந்து, வ.உ.சி. மைதானம் வரை இன்னா நாற்பது எனும் பெயரில் 40 பதாகைகளுடன் ஊர்வலம் நடத்தப்படும் என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.
கோவையில் பேசிய தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழக அரசிடம் கடந்த நான்கு வருடமாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் தமிழக அரசு எங்களை அழைத்து செம்மொழி மாநாட்டுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. அதை நம்பி நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.
எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு தேவையற்றது.
கேரள அரசு மது விலக்கு குறித்து ஆராய ஒரு குழு நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி உதயபானு தலைமையிலான அந்தக் குழு, கள் மது கிடையாது. கள் உணவின் ஒரு பகுதிதான் என்று அறிக்கை சமர்ப்பித்தது.
கேரள அரசு பிரதி மாதம் 1 ம் தேதி மதுக்கடையை மூடுகிறது. ஆனால் கள்ளுக்கடையை மூட அறிவிக்கவில்லை. கேரள அரசிடம் உதயபானு குழு சமர்பித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை.
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இனியவை நாற்பது என அலங்கார வாகனங்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து கொடிசியா வளகாம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இதே போல் கள் இறக்க அனுமதிக்கக் கோரி, இன்னா நாற்பது என்ற பெயரில், கொடிசியா வளாத்தில் இருந்து வ.உ.சி. மைதானம் வரை 40 பதாகைகளில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெறும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications