சிறுவனுக்கு செக்ஸ் தொல்லையா-தருமபுரம் ஆதீன மடம் மீது விசாரணை நடத்த உத்தரவு
சென்னை: மயிலாடுதுறையைச் சேர்ந்த சிறுவனுக்கு தருமபுரம் ஆதீன மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஆனந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
எனது சகோதரர் அசோக்குமார், கடந்த ஆண்டு இறந்து விட்டார், அவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நடத்தும் குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஆனந்த கிருஷ்ணனை அவனது தாய் லதா, மடத்தில் சேர்த்து விட்டார்.
அங்குள்ள விடுதியில், தங்கியிருந்த அனந்தகிருஷ்ணனை, அவனது உறவினர்கள் சந்தித்தனர். அப்போது மடத்தில் உள்ள 2 மடாதிபதிகள் கால்களை அமுக்கி விட வற்புறுத்துவதாகவும், தம்பிரான் சுவாமி, செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தான்.
இது குறித்து வெளியே சொன்னால் அனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் தொல்லை கொடுப்பார்கள் என்று அஞ்சுகிறோம். எனவே சிறுவன் ஆனந்தகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனபாலன், மனுதாரர் ஆனந்தியின் வீட்டில் தங்கியிருக்கும் ஆனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. மனுதாரரின் புகார் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனந்தி மீது சிறுவனின் தாயார் புகார்:
ஆனால், கடந்த 9-ந்தேதி, மயிலாடுதுறை போலீசில், ஆனந்தகிருஷ்ணனின் தாய் லதா ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகனை, தனது கணவரின் சகோதரி ஆனந்தி சொத்து தகராறில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் ஆனந்தி, ஆனந்தகிருஷ்ணனுடன், உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ஆனந்தகிருஷ்ணனை கடத்தவில்லை என்றும் எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். பின்னர்தான் தருமபுரம் ஆதீனம் மீது புகார் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த பிறகே தருமபுரம் ஆதீன மடம் மீதான புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications