ஆசிரியர் திட்டியதால், அவமானத்தால் தீக் குளித்து தற்கொலை செய்த மாணவர்
திருவிடைமருதூர்: நாச்சியார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் விஷ்ணுப்பிரியன் ஆசிரியர் திட்டியதால் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
திருவிடைமருதூர் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் +1, +2 மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது செல்போன் எடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில், அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் செல் போன் உள்ளதா என்று மாணவர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது +1 படிக்கும் மாணவன் விஷ்ணுப்ரியன் என்ற மாணவனிடம் சிகரெட் லைட்டர் இருந்ததுள்ளது கண்டறியப்படடது. மேலும் மூன்று மாணவர்களிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிகரெட் லைட்டர் வைத்திருந்த விஷ்ணுப்ரியனிடம், பள்ளி வளாகத்தில் சிகரெட் பிடிக்கத்தான் சிகரட் லைட்டர் வைத்திருந்ததாக கூறி விஷ்ணுபிரியனை வகுப்பு ஆசிரியர் திட்டியுள்ளார். இதற்கு அந்த மாணவன் ஆய்வு கூடத்தில் பயன்படுத்தவே லைட்டர் எடுத்து வந்தாக கூறியுள்ளான்.
இதையடுத்து ஆசிரியர் விஷ்ணுப்ரியனை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்பில் உள்ள மேசை மேல் நிற்க வைத்துவிட்டார்.
இதனால் அவமானம் ஏற்பட்டுவிட்டதாக கருதிய விஷ்ணுப்பிரியன் தனது வீட்டில், தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
அவனது பெற்றோர்கள் அவனை காப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிக்சை பலனின்றி மாணவன் விஷ்ணுப்ரிபன் இறந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications