ரேஷன் கடைகளில் ரூ.50க்கு 2 பாக்கெட் மளிகை பொருள்கள்
சென்னை: ரேஷன் கடைகளில் ரூ.50க்கு 2 பாக்கெட் மளிகை பொருள்கள் பிரித்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை எளிய மக்கள் எளிதாக வாங்கிப் பயன்படுத்துவதற்கு ஏற்ப மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் எடை அளவுகளைக் குறைத்து, 25 ரூபாய் என்ற விலையில் குடும்ப அட்டைதாரர்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப மாதம் இரண்டு பொட்டலங்கள் வரை வாங்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாறே நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
இவற்றை இரண்டு பொட்டலங்களாக 50 ரூபாய்க்கு வாங்குவதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 250 கிராம் மல்லித்தூள் 100 கிராம் எனவும், 250 கிராம் மிளகாய்த் தூள் 200 கிராம் எனவும், பொதுமக்களின் வசதிக்கேற்ப குறைத்து வழங்கப்பட்டாலும்;
மஞ்சள் தூள் 50 கிராம் என்பது 100 கிராம் எனவும், கடலைப்பருப்பு 75 கிராம் என்பது 100 கிராம் எனவும், வெந்தயம் 25 கிராம் என்பது 50 கிராம் எனவும், கடுகு 25 கிராம் என்பது 50 கிராம் எனவும், மிளகு 25 கிராம் என்பது 50 கிராம் எனவும், சீரகம் 50 கிராம் என்பது 100 கிராம் எனவும், கரம் மசாலா 10 கிராம் என்பது 20 கிராம் எனவும் கூடுதலாக வழங்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications