அணு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவே மோடி விடுவிப்பு-பாஜக, காங். மீது லாலு பாயச்ச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து தடுப்பு மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்ற பாஜகவின் உதவியை நாடியுள்ளது காங்கிரஸ். இதற்காகவே நரேந்திர மோடிக்கு சோராபுதீன் வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ நற்சான்றிதழ் கொடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இந்த விவகாரம் இன்று லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
மோடியை விடுவிக்க பாஜக பேசிய பேரத்திற்கு காங்கிரஸ் உடன்பட்டு விட்டது என்றும் லாலு கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், பாஜகவும், காங்கிரஸும் கை கோர்த்து விட்டன. மோடியை விடுவித்தால் அணு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தருவோம் என பாஜக பேரம் பேசி விட்டது. இதை காங்கிரஸும் ஏற்றுள்ளது. இதன் விளைவாகவே சோராபுதீன் வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என்று சிபிஐ கூறியுள்ளது.
ஒரு முதல்வருக்குத் தெரியாமல், உள்துறை அமைச்சர் (அமீத் ஷா) எப்படி எதையும் செய்ய முடியும். இது நம்பும்படியாக இல்லை என்றார் லாலு.
லாலுவுக்கு ஆதரவாக சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவும் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே ரகசிய பேரம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் பெரும் அமளி ஏற்பட்டு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications